பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா சம்பத் முதல்முறையாக சீரியலில் நடித்துள்ளார். சீரியலில் அனிதா சம்பத் அறிமுகமாகும் மாஸ்ஸான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். அவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே அவருக்கு அதிக ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் காலா, காப்பான், 2.0, ஆதித்ய வர்மா, தர்பார், டேனி என பல படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு விஜய் அனிதா சம்பத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளிலேயே அனிதாவின் தந்தை உயிரிழந்தார். இதனால் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்த அனிதா, செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடராமல் ஓய்வில் உள்ளார். முன்னதாக, அவரது காதலன் பிரபாகனை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் யூடியூப் சேனல் வைத்துள்ள நிலையில் அவ்வப்போது வீடியோக்கள் ஷேர் செய்வார்கள். அதில் ஸ்கின் கேர் டிப்ஸ், சமையல் வீடியோ உள்ளிட்டவை அப்லோடு செய்வார்கள். மேலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், காவேரி காலெடுத்து வச்சா, பிரச்னை பண்றவன் தூள் தூளா சிதறிடுவான் என்று கூற கலர்ஸ் டிவியில் சில்லுனு ஒரு காதல் சீரியலில் அனிதா மாஸாக அறிமுகமாகிறார். அனிதா சம்பத் அறிமுகமாகும் இந்த மாஸ்ஸான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல்முறையாக டிவி சீரியலில் நடிக்கும் அனிதா சம்பத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.