• vilasalnews@gmail.com

”எனது பாடலுக்கு அற்புதமான குரலை வழங்கிய சிலம்பரசன் அண்ணாவுக்கு நன்றி: காளிதாஸ் ஜெயராம்

  • Share on

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள இண்டிபெண்டண்ட் ஆல்பம் ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலை பாடிய சிலம்பரசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.

‘வானம்’ படத்திற்குப்பிறகு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘மாநாடு’ படத்தில் சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளனர். இப்படத்தின், முதல்பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இண்டிபெண்டண்ட் ஆல்பம் ’தப்பு பண்ணிட்டேன்’ பாடலை சிம்பு பாடியுள்ளார்.


சிம்பு பாடல் பாட, காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்பாடல் நேற்று மாலை வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், நடிகர் காளிதாஸ் ஜெயராம் சிலம்பரசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.


அந்தப் பதிவில் “எனது பாடலுக்கு அற்புதமான குரலை வழங்கிய சிலம்பரசன் அண்ணாவுக்கு நன்றி” என்று தனது நன்றியை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் 4 வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


  • Share on

'தலைவா.. தெய்வமே..’ சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்களால் அதிர்ந்தது விமான நிலையம்..

கோடியை தொட்ட முதல் தமிழ் சினிமா நடிகர்… தனுஷின் புதிய மைல்கல்!

  • Share on