• vilasalnews@gmail.com

இளம் நடிகையின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

  • Share on

கொரோனா பாதிக்கப்பட்ட இளம் நடிகை சரண்யா சசியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர், சரண்யா சசி. இவர் தமிழில் ‘பச்சை என்கிற காத்து’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. ஒருமுறை படப்பிடிப்பில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்த அவருக்கு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு 11 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.. அதன்பிறகு அவரின் உடல்நிலை படிப்படியாக தேறிய நிலையில் கடந்த மே 23ம் தேதி சரண்யா சசிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share on

என்ஜாய் என்ஜாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்..!

'தலைவா.. தெய்வமே..’ சென்னை திரும்பினார் ரஜினி.. ரசிகர்களால் அதிர்ந்தது விமான நிலையம்..

  • Share on