என்ஜாய் என்ஜாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டை பாடிய பாட்டியம்மா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் என்ஜாமி என்றால் என்ற பாடல் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.
என்ன குறை என்ன குறை என் செல்ல பேராண்டிக்கு என்ன குறை என்ற வரிகளை பாடல் பாடியிருந்தார். ஒப்பாரி பாடல் தனிச்சிறப்பு கொண்டது. அவருக்கு பாடகர் அறிவு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களுக்கு ஒப்பாரி பாடல் பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போய்டீங்க நான் எதிர்பார்க்கல பாட்டி ஒரு அற்புதமான பாட்டி எனவும் அவரது எதிர்பாராத மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனவும் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.