நடிகை கவிதாவின் மகன் இறந்து 12 நாட்களே ஆன நிலையில் அவரது கணவரும் நேற்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை கவிதா. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கவிதா தமிழில் ஆட்டுக்கார அலமேலு. காற்றினிலே வரும் கீதம். அந்தமான் காதலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் இவர் நடிக்கும் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். தற்போது 55 வயதான நடிகை கவிதா அன்பான கணவர், செல்ல மகன் என்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த கவிதாவின் வாழ்க்கையில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி விட்டது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய நிலையில் கவிதாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகன் சிகிச்சை பலனின்றி ஜூன் 17ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், மகன் உயிரிழந்த இரண்டு நாட்களிலேயே கவிதாவின் கணவர் தசரதரும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஜூன் 29-ஆம் தேதி இறந்தார். மகனையும் கணவரையும் அடுத்தடுத்து இழந்தது திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.