• vilasalnews@gmail.com

ரஜினியை விமர்சித்த நடிகை கஸ்தூரி திடீர் அந்தர் பல்டிக்கு காரணம் என்ன?

  • Share on
“கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விலக்குகளும் வழங்கப்படவில்லை. தடையை மீறி ரஜினிகாந்த் எப்படி பயணம் செய்தார்.

இதுகுறித்து ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும். ரஜினி உள்ளிட்ட யாரும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை'' என்று கஸ்தூரி கூறினார். இந்த பதிவு ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

“உடல்நல பிரச்சினை தனிப்பட்ட விஷயம் அதை உங்களிடம் சொல்ல அவசியம் இல்லை. ரஜினி அமெரிக்காவுக்கு எப்படி சென்றார் என்பதை குடியேற்ற அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். விளம்பரத்துக்காக இப்படி பதிவிட வேண்டாம் என்றெல்லாம் கூறி கஸ்தூரியை கண்டித்தனர்.

எதிர்ப்பை தொடர்ந்து கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி. நானே முதலில் சொல்கிறேன். 
பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்” என்று கூறியுள்ளார்.
  • Share on

'தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெறும் போது நான் கூடாதா?' - சீறும் பிரகாஷ்ராஜ்!

நடிகையின் மகனும், கணவரும் அடுத்தடுத்து கொரோனாவுக்கு பலியான சோக சம்பவம்..!

  • Share on