ஊரடங்கு சமயத்திலும் நடிகை ராஷ்மிகாவை சந்திக்க அவரது ரசிகர் ஒருவர் 900 கி. மீ. பயணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் நடிகை ராஷ்மிகாவின் தீவிர ரசிகர் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது மாநிலத்தில் இருந்து ராஷ்மிகாவின் இல்லம் இருக்கும் கர்நாடகாவின் குடகு பகுதிவரை 900 கி.மீ. வரை பயணித்துள்ளார். வழியெங்கும் நடிகையின் வீட்டு விலாசத்தை கேட்டுக்கொண்டபடி சென்றதால் அவர் மீது சந்தேகமடைந்த சிலர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அந்த நபரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குடகு பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாது எனக் கூறியுள்ளனர். மேலும் ராஷ்மிகா படப்பிடிப்புக்காக மும்பை சென்று விட்டார் என்ற தகவலையும் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் அந்த ரசிகர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பியுள்ளார்.