சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நாளை விஜய் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் தளபதி 65 படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இதை ஆவலுடன் எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஜியார்ஜியாவில் இந்த படத்திற்கான முதற்கட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் துவங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.