தற்கொலை செய்து கொள்வதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்த மீராமிதுனுக்கு சென்னை பெருநகர போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
தற்கொலை செய்துகொள்ள போவதாக முதலமைச்சர் மற்றும் பிரதமரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை மீரா மிதுன்
அஜித் ரவி என்பவர் தனக்கு தொல்லை கொடுப்பதாகவும் அவர் மீது பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்குப் பிறகாவது அஜித்துக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ள சென்னை பெருநகர காவல்துறை புகாரை மின்னஞ்சல் வழியாக அளிக்குமாறு தெரிவித்துள்ளது.
அந்த பதிவையும் நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.