கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று, தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என ஏராளமானவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை முதலமைச்சிடம் வழங்கினார்.