வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 122 சிலிண்டர் குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ரூ. 122 சிலிண்டர் குறைந்துள்ளது.. அதன்படி வர்த்தக சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,473.50 ஆகவும், மும்பையில் ரூ.1,422.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,544.50 ஆகவும், சென்னையில் ரூ.1,603 ஆகவும் உள்ளது.
எனினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே கடந்த மாதம் இருந்த விலையே தொடர்கிறது.. அதன்படி சமையல் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.825 ஆகவும், டெல்லியில் ரூ.809.00 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.835.50 என்றும், மும்பையில் ரூ.809 ஆகவும், பெங்களூருவில் ரூ.812 என்றும் விற்கப்படுகிறது..