மஹிந்திரா நிறுவனம் விரைவில் புதிய ஸ்கார்பியோ மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது எனதகவல் வெளியாகி இருக்கின்றன.
தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல் படி புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் இசட்101 எனும் குறியீட்டு பெயர் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இது லேடர் பிரேம் சேசிஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஸ்பை படங்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ லோயர் வேரியண்ட் ஸ்டீல் வீல்களுடன் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 158 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.