ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி 1, 2021 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. ரெனால்ட் மாடல்கள் விலை அதிகபட்சம் ரூ. 28 ஆயிரம் வரை அதிகமாகிறது.
ரெனால்ட் கார் நிறுவனம் விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டீல், அலுமினியம், பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார் விலை உயர்த்தப்படுவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரும் சந்தை ஆகும். ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் என அனைத்து மாடல்களும் சர்வதேச சந்தையில் அதிக பிரபலமாக இருக்கின்றன.