• vilasalnews@gmail.com

இந்தியாவில் 2021ல் ஜியோ 5ஜி சேவையை தொடங்க உள்ளது - முகேஷ் அம்பானி அறிவிப்பு

  • Share on

இந்தியாவில் அடுத்த ஆண்டில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் தொடங்க இருப்பதாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டு முதல் 4ஜி சேவையை வர்த்தக அடிப்படையில் தொடங்கிய ஜியோ நிறுவனம், தற்போது இந்திய செல்போன் சந்தையில் அதிக சந்தாதாரர்களை கொண்ட செல்போன் நிறுவனமாக திகழ்கிறது.

இந்நிலையில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் இன்று பேசிய முகேஷ் அம்பானி, 2021 ஆண்டின் இரண்டாவது பாதியில் 5 ஜி சேவையை ஜியோ தொடங்க இருப்பதாக கூறினார்.

இதேபோல் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையிலான ஆன்ட்ராய்ட் செல்போனை ஜியோ உருவாக்கி வருவதாகவும், வரும் மாதங்களில் அந்த போன்கள் சந்தைக்கு வருமென்றும் குறிப்பிட்டார்.

இந்த போன் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் சந்தைக்கு வருமெனவும், விலை 4 ஆயிரம் ரூபாயாக இருக்கக்கூடுமென என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share on

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்

RTGS வசதி இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும்-ரிசர்வ் வங்கி

  • Share on