• vilasalnews@gmail.com

இந்தியாவில் அறிமுகமானது கேடிஎம் சைக்கிள்கள்

  • Share on

கேடிஎம் நிறுவனம் மிதி வண்டிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஆல்ஃபா வெக்டர் எனும் இந்திய நிறுவனத்துடன் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் சைக்கிள் அறிமுகமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஆல்ஃபா வெக்டர் நிறுவனம், அண்மையில் மெராகி எனும் விலைக் குறைந்த இ-சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த இ-சைக்கிளைத் தொடர்ந்தே புதிய கேடிஎம் மிதிவண்டிகளையும் ஆல்ஃபா வெக்டார் விற்பனைச் செய்ய இருக்கின்றது.  ஆல்ஃபா வெக்டர் விற்பனையகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


கேடிஎம் நிறுவனத்தின் சைக்கிள்கள் சுமார் ரூ. 30 ஆயிரத்தில் தொடங்கி 10 லட்ச ரூபாய் வரையிலான விலையில் சைக்கிள்கள் விற்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.

கேடிஎம் சைக்கிள்களின் அறிமுகத்தின் மூலம் தங்களுடைய நிறுவனத்தின் சைக்கிள்களின் விற்பனையும் பலம் பெறும் என ஆல்ஃபா வெக்டார் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

  • Share on

"ஏர் பிளைன் வடிவம் கொண்ட புதிய எலெக்ட்ரிக் கார்" 2021ல் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பு

இந்தியாவில் 2021ல் ஜியோ 5ஜி சேவையை தொடங்க உள்ளது - முகேஷ் அம்பானி அறிவிப்பு

  • Share on