இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம், 915 ரூபாயில் விமானத்தில் பயணிக்க சலுகையை அறிவித்துள்ளது. இது அதன் 15 ஆண்டு விழாவினைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
இதில் விமான கட்டணம் 915 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது. இந்த சலுகையானது ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 6 வரையில் முன் பதிவு செய்பவர்களுக்கு பொருந்து எனவும் அறிவித்துள்ளது.
இவ்வாறு இந்த சலுகையின் மூலம் பதிவு செய்யப்படும் இந்த டிக்கெட் கட்டணமானது, செப்டம்பர் 1, 2021 முதல் மார்ச் 26, 2022 வரையில் பயணித்துக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. ஆக குறைந்த விலையில் டிக்கெட்டுகளை பதிவு செய்து, மிகவும் சிறப்பான பயணத்தினை மேற்கொள்ளுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 4, 2021 அன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 6,2021 இரவு 12 மணி வரையில் முன் பதிவு செய்து கொள்ளலாம். எனினும் விமான நிலைய கட்டணம் மற்றும் அரசு விதிக்கும் வரிகளுக்கு இந்த சலுகை பொருந்தாது. எனினும் இந்த சலுகையானது வரையறுக்கப்பட்ட அளவு என்றும் கூறப்படுகிறது.
இந்த சலுகைகள் தவிர, கூடுதலாக வங்கி கிரெடிட் கார்டு அட்டைகள் மற்றும் Ka-ching cardல் கூடுதல் சலுகைகள் உண்டு என விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இது தவிர கார் வாடகை சேவையும் 315 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
பயனாளர்கள் தங்களது விமான கட்டணங்களை HSBCS credit card மூலம் செலுத்துபவர்களுக்கு அதிகபட்சம் 5% வரையில், அதிகபட்சம் 750 ரூபாய் வரையில் கேஷ்பேக் சலுகையும் உண்டு என அறிவித்துள்ளது. எனினும் இந்த சலுகையானது குறைந்தபட்சம் 3,000 மதிப்புள்ள புக்கிங்கிற்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
இண்டிகோவின் சலுகைகள் குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க ஒரு நல்ல வாய்ப்பாகும். மேலும் இந்த சலுகையானது டிக்கெட் இருப்பினை பொருத்தே வழங்கப்படும். எனினும் இந்த சலுகையில் எந்த இடங்களுக்கு செல்லலாம்? என்ற மற்ற விவரங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.
இது குறித்து இண்டிகோ நாங்கள் 15 ஆண்டுகள் நிறைவான வருடங்களை கொண்டாடும் ஒரு முக்கியமான தருணம். நெருக்கடியான காலகட்டங்களில் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு இண்டிகோ அணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என இண்டிகோ கூறியுள்ளது.