• vilasalnews@gmail.com

0% வட்டியில்லா கடன் : பேடிஎம் (Paytm) புதிய அதிரடி அறிவிப்பு..!

  • Share on

இன்றைய இணைய உலகில் மிக முக்கியமாக பணப் பரிவர்த்தனைகளுக்கான பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆப்களில் பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பேடிஎம் ஆப்களில் பல அதிரடியான சேவைகளை அவ்வப்போது பயனாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வட்டியில்லா கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு பெரிதும் பயன்பெறும் வகையில் இது அமைந்துள்ளது. ‘Postpaid Mini Service’ என்ற புதிய கடன் சேவையை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியில் கடன் வாங்கினால் வட்டி எதுவும் வசூலிக்கப்படாது. 0 சதவீத வட்டிதான். ஆனால் இந்த வசதியில் பெரிய தொகையைக் கடனாகப் பெறமுடியாது. 250 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் மட்டுமே கடன் பெற முடியும். இந்தக் கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். சிறிய தொகை என்றாலும் வட்டியே இல்லாமல் கிடைப்பதால் வாடிக்கையாளர்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், பேடிஎம் ஆப்பில் மொபைல் ரீசார்ஜ், பணப் பரிவர்த்தனை, சிலிண்டர் புக்கிங், கரெண்ட் பில், டிடிஹெச் ரீசார்ஜ், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை போன்ற பல வசதிகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் உடனடிக் கடன் போன்ற கடன் வசதியையும் பேடிஎம் வழங்குகிறது. குறிப்பாக, பேடிஎம் செயலியில் ’Buy Now Pay later’ என்ற கடன் சலுகை வாடிக்கையாளர்களிடையே அதிக பயன்பாட்டைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

புதிய உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை… பெட்ரோல் விலை மேலும் உயரும் அபாயம்!

70 கிலோமீட்டர் வேகம்...ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை பயணம்...புதிய பைக்!

  • Share on