• vilasalnews@gmail.com

ஆப்பிள் சாம்சங்கை பின்னுக்குத் தள்ளிய நிறுவனம்..! அதிகரித்த செல்போன் விற்பனை..

  • Share on

பழைய மொபைல்களுக்கு சந்தையில் ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி சியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. அதிகளவில் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக உள்ளது. குறிப்பாக மொபைல் போன்றவற்றின் விற்பனை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணி புரியும் சூழல், பள்ளிகள் விடுமுறை காரணமாக ஆன்லைனில் கல்வி கற்பது ஆகியவற்றால் ஸ்மார்ட்போனிகளின் தேவை உயர்ந்துள்ளது. பலர் புதிய செல்போன்களை வாங்கினாலும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒரே வாய்ப்பாக செகண்ட் ஹேண்ட் எனப்படும் பழைய மொபைல்களை உள்ளன. இதன் காரணமாக இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் மொபைல்களின் விற்பனை கடந்த ஆண்டு வளர்ச்சியை பெற்றுள்ளது.

அந்த வகையில் பழைய செல்போன்கள், லேப்டாப் ஆகிய பொருட்களை விற்பனை செய்து வருகிறது கேஷிஃபை தளம். இந்த கேஷிஃபை தளம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பழைய செல்போன்களை புதுப்பித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கேஷிஃபை தனது தளத்தின் விற்பனை போன்றவற்றை வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சுமார் 4000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அதிகமான இந்தியர்கள் மடிக்கணினிக்கு பதிலாக ஸ்மார்ட் போன் வாங்கவே விரும்புகின்றனர் என தெரியவந்தது.

இதேபோல் 84 சதவீதம் பேர் தங்களது செல்போன்களை, 14 முதல் 18 மாதங்களில் மாற்றி புதிய செல்போனை வாங்கியுள்ளனர். கட்டணமில்லா ஈஎம்ஐ வசதி, மாற்று உத்தரவாதம் ஆகிய வசதிகளும் இதில் பெரும் பங்காற்றுகின்றன.

செகண்ட் ஹேண்ட் செல்ஃபோன் சந்தையைப் பொறுத்தவரை 26 சதவீத பங்களிப்புடன் சியோமி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. 20 சதவீத பங்களிப்புடன் ஆப்பிள் நிறுவனம் இரண்டாவது இடமும் 16 சதவீத பங்களிப்புடன் சாம்சங் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பொதுவாக ஆப்பிள் போனின் விலை அதிகமாக காணப்படுவதால் நடுத்தர வர்க்கத்தினர் பழைய ஆப்பிள் போனை வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் காட்டி

வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. நெல்லை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், மெட்ரோ நகரங்களில் செகண்ட் ஹேண்ட் மொபைலுக்கு அதிக அளவில் கிராக்கி உள்ளதும் தெரியவந்துள்ளது.

கொரோனா பேரிடர் காலத்திலும் செகண்ட் ஹேண்ட் செல்போன் விற்பனை அதிகரித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

கார் விலையை 4-வது முறையாக மீண்டும் உயர்த்துகிறது மாருதி நிறுவனம்

புதிய உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை… பெட்ரோல் விலை மேலும் உயரும் அபாயம்!

  • Share on