<p><b>தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக சாருஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார்.&nbsp;</b></p><p>தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து&nbsp; தலைமைச் செயலா் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி, சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.&nbsp;</p><p>இதையடுத்து வணிக வரித்துணை இணை ஆணையராக பணிபுரிந்து வந்த சாருஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார். இதுபோல் தமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>