<p><span style="font-weight: 700;">காயல்பட்டினத்தை சேர்ந்த நண்பர்கள் குழுவினர், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும்&nbsp;</span><b>ஆதரவற்றோருக்கு மனித நேயத்தோடு இலவசமாக உணவு பொட்டலம் வழங்கிவருகின்றனர்.</b></p><p>கொரோணா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் சாலையோரம் உள்ள&nbsp; ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதியோர்களுக்கு காயல்பட்டினத்தை சேர்ந்த நண்பர்கள் குழு சார்பாக காதர், ஷாஜஹான், அபுபக்கர் சித்திக் மற்றும் உமர் ஹோட்டல் உரிமையாளர் ஆகியோர் தினந்தோறும் உணவு பொட்டலம் வழங்கி வருகின்றனர். </p><p>இவர்கள் முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி,குலசேகர பட்டினம்,வீரபாண்டிய பட்டினம்,காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் உணவு வழங்கி வருகின்றனர்.&nbsp; அதுமட்டுமல்லாது இவர்கள்&nbsp; ஏழை, எளிய மாணவர்களுக்கு&nbsp; பல உதவிகளையும் செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.</p>