தமிழகத்தில் ஒரு வாரம் கடும் ஊரடங்கு : எதற்கெல்லாம் அனுமதி?
நிருபர்
May 22, 2021
தமிழகத்தில் ஒரு வாரம் கடும் ஊரடங்கு : எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. காரணம் தினமும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒருவாரம் ஊரடங்கு தளர்வுகளற்று பின்பற்றினால் மட்டுமே கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் என அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் இடம்பெற்ற சட்டமன்ற ஆலோசனை குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ஊரடங்கை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளதால் வரும் ஒருவாரத்திற்கு எந்தவித தளர்வுகள் இன்றி ஊரடங்கு பின்பற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே 24-ஆம் தேதி முதல் எந்த வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பால் விநியோகம், குடிநீர்,தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்களுக்கு அனுமதி

பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைகடைகள் திறக்க அனுமதி

வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு, தனியார் பேருந்துகள் செல்ல அனுமதி

காய்கறிகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யபப்டும்

பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம்

உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவுடன் அனுமதி

உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.