<p><b>தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியது.</b><br></p><p>கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.</p><p>இந்தநிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்த பணத்தை கொடுப்பதாக அறக்கட்டளை தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.</p>