இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை - தமிழக அரசு அறிவிப்பு
நிருபர்
May 08, 2021
இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை - தமிழக அரசு அறிவிப்பு

திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதால் இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

முழு ஊரடங்கு திங்கள் கிழமை முதல் அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.