தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் பெண்களை குறிவைப்பவரா நீங்கள்? இனி குறிவைத்து தூக்கப்படுவீர்கள்!
நிருபர்
May 11, 2026
தூத்துக்குடி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பாக புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் PA சிஸ்டம் அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பாக புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் PA சிஸ்டம் அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும் குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் காவல்துறை சார்பாக புதிதாக CCTV கேமராக்கள் மற்றும் பேருந்து நிலையத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில்பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் PA System எனப்படும் ஒலிபெருக்கி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.

அதன்படி பேருந்து நிலைய வளாகத்திற்குள் பயணிகள் காத்திருக்கும் பகுதி பேருந்தில் ஏறும் இறங்கும் பகுதி உட்பட அனைத்து பகுதிகளையும் முழுமையாக கண்காணிக்கும் வகையில் மொத்தம் 37 புதிய சிசிடி கேமராக்களும், உயர்திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் மற்றும் 8 ஹாரன் ஸ்பீக்கர்களும், மேலும் பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் வரை PA சிஸ்டம் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.

இந்த CCTV கேமராக்கள் மற்றும் PA சிஸ்டம் அமைப்பை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நவீன CCTV காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் நேரடியாக கண்காணித்தும், தொடர்பு கொள்ளவும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் மேற்படி அமைப்பை உருவாக்க உதவிய சிக்னல் கோர் சொல்யூசன்ஸ் (Core Techno Solutions) மற்றும் தூத்துக்குடி TMB வங்கி அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.