தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய் ஆற்றிய உரை இதோ!
நிருபர்
May 10, 2026
10.05.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரை. தமிழகத்தின் 10 லட்சம் கோடி கடன் குறித்த வெள்ளை அறிக்கை, போதைப்பொருள் ஒழிப்பு, மற்றும் சமரசமற்ற சமூக நீதி குறித்த TVK அரசின் தொலைநோக்கு பார்வைகளின் தொக

என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்!

என்ன சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடையவேண்டும் என்று இருந்த ஒரு சாதாரண உதவி இயக்குநருக்குப் பிறந்த பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமை மற்றும் பசி என்றால் என்னவென்று நன்றாகவே தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்தெல்லாம் வந்துவிடவில்லை. உங்களில் ஒருவர் மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒரு பிள்ளையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாகத்தான் என்னை உணர்கிறேன்.

நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான் சினிமாவில் எனக்கொரு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்தீர்கள். இப்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த என்னை, "வா விஜய், நாங்களெல்லாம் இருக்கிறோம்" என்று சொல்லி அவ்வளவு அன்பாக, உறவாக ஏற்றுக்கொண்டீர்கள். இந்தப் பயணத்தில் எனக்கு எவ்வளவோ கஷ்டங்களும் அவமானங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், எனக்காகக் கூட நின்ற உங்களுக்கும் அதே கஷ்டங்களும் அவமானங்களும் நேர்ந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என்னுடைய வலிகளை உங்களுடையதாக நினைத்து என் கூடவே நின்று, இன்றைக்கு 'ச. ஜோசப் விஜய்' எனும் என்னை முதலமைச்சராக்கி இருக்கிறீர்கள்.

நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது; நானும் ஒரு இயல்பான சாதாரண மனிதன்தான். பொய் வாக்குறுதிகள் கொடுத்து உங்களை ஏமாற்ற மாட்டேன்; எது சாத்தியமோ அதை மட்டும்தான் செய்வேன். இத்தனை கோடி மக்கள் என் கூட இருக்கும்போது, என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் தன்னம்பிக்கை என் மனதில் இருக்கிறது. அதேவேளை, நம்முடைய தமிழ்நாடு அரசு இருக்கும் நிலைமையைப் பற்றி நான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்துவிட்டு, கஜானாவைச் சுத்தமாகத் துடைத்து வழித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் இக்கட்டான நிலைமையில்தான் இந்தப் பொறுப்பை நாம் கையில் எடுத்திருக்கிறோம்.

உள்ளே சென்று பார்த்தால்தான் எது எந்த நிலைமையில் இருக்கிறது என்று தெரியும். அதையெல்லாம் ஆய்வு செய்துவிட்டு ஒரு வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வெளிப்படையான அரசாங்கமாக (Transparent Government) இதைத் தொடர விரும்புகிறேன். யாரையும் மறைமுகமாகவோ அல்லது ஒளிந்து கொண்டோ சந்திக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாகத்தான் செய்வேன். இவ்வளவு பெரிய பொறுப்பை என் கையில் கொடுத்திருக்கும் நீங்கள், சொன்னவற்றைச் செயல்படுத்த எனக்குக் கொஞ்சம் அவகாசமும் ஒத்துழைப்பும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது உங்களுடைய ஆட்சி. பெண்கள் பாதுகாப்பை மிகவும் உறுதியாக (Strict) வைத்திருப்பேன். போதைப்பொருள் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அதை இன்றிலிருந்தே தொடங்குவேன். நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லோருக்குமான பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன். என்னை அவமானப்படுத்தியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களும் என் மக்கள்தான். நண்பர்களோ எதிரிகளோ, எட்டு கோடி மக்களும் என் மக்களே. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை விஷயங்களில்தான் என்னுடைய முழு முதல் கவனம் இருக்கும்.

மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவைக்கூட நான் தொடமாட்டேன்; எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான், தப்பு பண்ண விடவும் மாட்டான். என் கூட இருப்பவர்களாக இருந்தாலும் சரி, "ஜெயித்துவிட்டோம், ஒரு ஆட்டம் ஆடலாம்" என்று யாராவது நினைத்தால் இப்போதே அதை மனதிலிருந்து அழித்துவிடுங்கள். இங்கு பவர் சென்டர் என்பது ஒன்றுதான், அது என் தலைமையிலான சென்டர் மட்டுமே. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் என எல்லோருமே நம்முடைய TVK அரசில் நன்றாக இருப்போம்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பதுதான் நம்முடைய சமரசம் இல்லாத அடிப்படைக் கோட்பாடு. சிறுபான்மை சகோதரர்களே, உங்களுக்காக நம்முடைய TVK அரசு கூடவே நிற்கும். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான முகம்தான் இந்த விஜயினுடைய முகம்; இதில் நீங்கள் 100% நம்பலாம். மேலும், என்னுடைய குட்டி நண்பர்கள் மற்றும் நண்பிகளுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், வாக்குச்சாவடி முகவர்களுக்கும், எனது 'வர்ச்சுவல் வாரியர்ஸ்' (Virtual Warriors) அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.

வாருங்கள், எல்லோரும் சேர்ந்து ஒரு புதிய மற்றும் உண்மையான சமூக நீதி ஆட்சியை (New era of real secular social justice) வழங்குவோம். நமது அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ள காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே, திரு. ராகுல் காந்தி, விசிக தலைவர் அண்ணன் திரு. திருமாவளவன், சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.