தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மற்றும் விடியல் பயணம் ( இலவச பேருந்து பயணம் ) போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை மக்களிடம் எடுத்துரைத்து தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளார் கீதா ஜீவன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் தீவிர தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ( 10 ஏப்ரல்,2026 ) தூத்துக்குடி மாநகராட்சி 24,25,26 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட குரூஸ்புரம், சந்தனமாரிஅம்மன் கோவில் தெரு, செயின்ட் மேரிஸ் கல்லூரி பின்புறம், புதுத்தெரு, காளியப்ப பிள்ளை தெரு, வாடித்தெரு, வடக்கு ராஜா தெரு, எஸ் எஸ் பிள்ளை மார்க்கெட், வடக்கு வாணியன் விளை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன், தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மற்றும் விடியல் பயணம் ( இலவச பேருந்து பயணம் ) போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை மக்களிடம் எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.