தூத்துக்குடியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது.

தமிழக சட்டசபைக்கு இம்மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இதில் தூத்துக்குடி சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிருக்கிறார். இந்த நிலையில், தூத்துக்குடி எஸ்ஏவி பள்ளி மைதானம் எதிரில், இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டது.

இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.