வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்ட திமுக... ஓட்டப்பிடாரத்தின் வெற்றி முகம் யார்?
நிருபர்
April 03, 2026
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ததில் தலைமை கோட்டை விட்டதால், திமுக வசம் இருக்கும் இத்தொகுதி, அதிமுக கூட்டணி வசம் செல்லும் சூழல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ததில் தலைமை கோட்டை விட்டதால், திமுக வசம் இருக்கும் இத்தொகுதி, அதிமுக கூட்டணி வசம் செல்லும் சூழல் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் ( தனி ) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டியை தவிர மீதமுள்ள 5 தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. ஆனால், இம்முறை 2026 தேர்தலில், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகளில் அதிமுகவே வெற்றிப்பெறக் கூடிய சூழல் இருப்பதாக முதல் கட்ட தேர்தல் கள நிலவரம் உணர்த்துவதாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் கால் ஊன்ற முடியாத திமுகவை, அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போதே இடைத்தேர்தலில் வென்றதோடு, அடுத்து வந்த 2021 பொதுத்தேர்தலிலும் வென்று தொகுதியை திமுக வசப்படுத்திய சிட்டிங் எம்எல்ஏ சண்முகையாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காமல், புது முக வேட்பாளராக இளைஞரணி நிர்வாகி ராமஜெயம் என்பவரை ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளராக தேர்வு செய்து திமுக தலைமை கோட்டை விட்டதால், திமுக வசம் இருக்கும் இத்தொகுதி, அதிமுக வசம் செல்வதில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று நம்புகின்றனர் விபரம் அறிந்த அரசியல் நோக்கர்கள்.

1991, 2001, 2006, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக நேரடியாகவும், 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் என ஓட்டப்பிடாரம் தொகுதியானது அதிமுக வசம் பலமாக இருந்த நிலையில் தான், அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது நடந்த 2019 இடைத்தேர்தலில் திமுக வென்று ஓட்டப்பிடாரம் தொகுதி வரலாற்றை மாற்றி அமைத்து, தொகுதியை திமுகவிற்கு கைப்பற்றிய பெருமை ஓட்டப்பிடாரம் நடப்பு எம்எல்ஏ சண்முகையாவையே சாரும். அப்படியிருக்க அவருக்கு 2026 தேர்தலில் மீண்டும் சீட் வழங்காமல் மறுக்கப்பட்டது என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் அடுத்தடுத்து வெற்றி பெற்று அதிகார மையத்தின் உச்சிக்கு செல்வதை பொறுக்க முடியாமல், அதை தடுக்கும் நோக்கத்தோடு ஆணவ சாதிய கண்ணோட்டத்தோடு, 3 வது முறையாக மீண்டும் சண்முகையாவிற்கு சீட் வழங்கக்கூடாது என்று வேண்டுமென்றே திட்டமிட்ட சதிசெயலாகவே இருப்பதாக, சண்முகையாவின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

அதோடு, தனித்தொகுதியாக இருந்தாலும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளில் சண்முகையா எம்எல்ஏவாக இருந்த காலகட்டத்தில், எந்தொரு இடத்திலும், பொது நிகழ்வு, விழாக்களில் சாதிய ரீதியான பார்வைகளோ, நடவடிக்கைகளோ இல்லாமல் இருப்பதை காண முடிந்தது. இதனால் அனைத்து சமூக மக்களுக்கான பொதுவான சட்டமன்ற உறுப்பினராக சண்முகையா நிகழ்ந்தார். அதனாலேயே அவருக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கிராம மக்கள் தன்னெழுச்சியாகவே, சண்முகையாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, திமுக தலைமைக்கு கோரிக்கை வைத்து போராட ஆரம்பித்தார்கள். இந்தப் போராட்டமானது தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் வருகிறது.

இத்தகைய சூழலில் தான் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரை தேர்வு செய்ததில் தலைமை கோட்டை விட்டதால், திமுக வசம் இருக்கும் இத்தொகுதி, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வெற்றி பெறும் நிலை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.