எட்டயபுரத்தில் நாளை மாபெரும் கோலப் போட்டி : ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் தினத்தில் அசத்தல் பரிசுகள்!
நிருபர்
March 07, 2026
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் தினத்தில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நாளை (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) பெண்களுக்கான மாபெரும் கோலப் போட்டி நடைபெற உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் தினத்தில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நாளை (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) பெண்களுக்கான மாபெரும் கோலப் போட்டி நடைபெற உள்ளது.

எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டி, எட்டயபுரம் நடுரோடு பட்டத்து விநாயகர் கோவில் முன்பிருந்து சந்திரன் லட்சுமி மண்டபம் வரை உள்ள பகுதியில் நாளை (மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவிற்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக இலக்கிய அணி இணைச் செயலாளருமான சின்னப்பன் தலைமை தாங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சிப் பொருளாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவிக்க உள்ளார்.

வாரி வழங்கப்படும் பரிசுகள்

கோலப் போட்டியில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் பெண்களுக்கு பிரம்மாண்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் பரிசு: LED டிவி

இரண்டாம் பரிசு: வாஷிங் மெஷின்

மூன்றாம் பரிசு: ஏர் கூலர்

நான்காம் பரிசு: கிரைண்டர்

ஐந்தாம் பரிசு: மிக்சி

ஆறாம் பரிசு: எலக்ட்ரிக் ஸ்டவ்

மேலும், ஏழாவது பரிசு 6 நபர்களுக்கு பட்டுச் சேலைகள், எட்டாவது பரிசு 4 பேருக்கு ஹேண்ட் பேக், ஒன்பதாவது பரிசு தலா 2 நபர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், பத்தாவது பரிசாக 2 நபர்களுக்கு மேக்கப் கிட்கள், பதினொன்றாம் பரிசாக 3 பேருக்கு டிபன் பாக்ஸ், பனிரெண்டாம் பரிசாக 2 நபர்களுக்கு மேக்கப் கிட்கள் என வரிசையாக பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர, போட்டியில் கலந்து கொள்ளும் 100 பெண்களுக்கு ஆறுதல் பரிசாக டிபன் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் தினத்தில் எட்டயபுரத்தில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட கோலப் போட்டி அப்பகுதி பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.