ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவில்லிகோட்டை ஊராட்சிக்குட்பட்ட கல்லத்திகிணறு கிராமத்தில், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 28.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  உணவு அருந்தும் கூடம் மற்றும் சமையலறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டாட்சியர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாச்சலம், உதவி பொறியாளர்  செந்தில், வருவாய் ஆய்வாளர்  ரமா மற்றும் ஊராட்சி செயலர்  மனோகரன், திமுக இளைஞரணி நிர்வாகிகள் குணசிங்,  ராஜ், அலெக்ஸ் மற்றும் மகளிரணி தாமரைச்செல்வி உட்பட  கல்லத்திகிணறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலந்துகொண்டனர். புதிய கட்டிட வசதி தங்களுக்குக் கிடைத்தமைக்காகப் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்குத் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.