ஆதனூர் கிராமத்தில் செல்வவிநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்கஈஸ்வரர் திருக்கோவிலில் 35 வது ஆண்டு மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், ஆதனூர் கிராமத்தில், வருகிற பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள்,  செல்வ விநாயகர், பால விநாயகர், சக்தி ஈஸ்வரி, சிவலிங்க ஈஸ்வரர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவன், காலபைரவர், ஜலதுர்க்கை, நவக்கிரகங்கள், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோட்டையில் அமைந்துள்ள வேத நாராயணர்,  உத்தண்டராய சுவாமி, ஜெகவீர மொட்டைய சாமி, இருளப்பசாமி, கருப்பசாமி, பத்திரகாளி, பேச்சியம்மன், மாரியம்மன், லாட சன்னிகர்,  வைரவன், ஜெகவீர சக்கதேவிக்கும் மகாசிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.