விளாத்திகுளம் தொகுதியை விட்டுக் கொடுப்பது யார்? - தே.ஜ.கூட்டணியில் அமமுக இணைந்ததால் எகிறும் எதிர்பார்ப்பு!
நிருபர்
January 24, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததால் விளாத்திகுளம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுக சின்னப்பன், அமமுக உமா மகேஷ்வரி இருவரும் போட்டிபோட விரும்புவதால், இதில் விட்டுக்கொடுப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்ததால் விளாத்திகுளம் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏக்கள் அதிமுக சின்னப்பன், அமமுக உமா மகேஷ்வரி இருவரும் போட்டிபோட விரும்புவதால், இதில் விட்டுக்கொடுப்பது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ( தனி ) என மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் நான்கு தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், ஒரு அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர்.

இதில், கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக அதிமுகவின் கைவசம் இருந்து, அதிமுகவின் எஃகு கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியானது, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்கண்டேயன் வெற்றி பெற்றதையடுத்து அது திமுக வசமானது தொகுதி.

எனவே வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தொகுதியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே டிடிவி தினகரன் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இணைந்து இருப்பது, சிதறி போன அதிமுகவின் வாக்குகள் ஒன்றுபடுவதற்கான நிலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, இம்முறை விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் அதிமுகவினர் அனைவரும் உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையே 'எடப்பாடியை எதிர்த்துக்கொண்டு, எனக்காக அரசியல் செய்து இழந்தவர்கள் அதிகம். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென விரும்புகிறேன்'. எனவே, கடையநல்லூர், மேலூர், காரைக்குடி, மன்னார்குடி, விளாத்திகுளம் இவற்றோடு சைதாப்பேட்டை, திருமங்கலம் அல்லது பாபநாசம், மடத்துக்குளம் உள்ளிட்ட தொகுதிகளைக் கேட்டிருக்கிறார் டிடிவி தினகரன்.

ஆகவே, விளாத்திகுளம் தொகுதியை கூட்டணியில் அமமுக கேட்கும் பட்சத்தில், அமமுக சார்பில் அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாமகேஷ்வரியே போட்டியிட வாய்ப்புள்ளது. ஒரு வேளை அத்தொகுதியை அதிமுக விட்டுத்தராத பட்சத்தில் அதிமுக சார்பில் அத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.