பொங்கல் திருநாள் - பள்ளிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை!
நிருபர்
January 12, 2026
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் ஜன. 15ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினமும், 17ஆம் தேதி (சனிக்கிழமை) உழவர் தினமும் கொண்டாடப்பட இருக்கிறது.

இந்தநிலையில், போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் சொந்த ஊர்களுக்கு வசதியாக செல்லும் வகையில், ஜனவரி 14ஆம் தேதி (போகி) புதன்கிழமையையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.