பொங்கல் பண்டிகை : தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
நிருபர்
January 07, 2026
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் கூடுதல் நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி,

சென்னை சென்டிரலில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06151) வருகிற 12 மற்றும் 19ம் தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06152) வருகிற 13 மற்றும் 20ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.