தூத்துக்குடியில் நாய் குறுக்கே வந்தததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர்  மற்றும் மாணவிகள் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ வட்டக்கோவில் அருகில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரான தாளமுத்துநகரைச் சேர்ந்த வீரபத்திரன் மற்றும் ஆட்டோவில் இருந்த மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.