தூத்துக்குடி மாநகராட்சி 8 வது வார்டுக்குட்பட்ட தவெக தொண்டர் அமலன் என்பவரது படகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதாகி கடலில் மூழ்கி முழுவதுமாக சேதமடைந்தது.

இதில், அதிஷ்டவசமாக படகில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஆனால், படகு முழுவதுமாக சேதம் அடைந்தது. இதனையடுத்து சேதமடைந்த  படகையும், படகில் பயணம் செய்து கரை திரும்பியவர்களையும், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் 23.07.2025 அன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில், அப்பகுதி தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் வேண்டுகோளுக்கிணங்க, திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப் படகு மீனவர் பொது பஞ்சாயத்தார்கள் முன்னிலையில்,

தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், நேரில் சந்தித்து, நிதி உதவியை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வழங்கினார். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், உடன் இருந்தனர்.