தூத்துக்குடி மென்பொறியாளர் ஆணவக் கொலை : அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்!
நிருபர்
July 29, 2025
ஆணவக் கொலையை தடுக்க அரசு அதற்கு தனி சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

ஆணவக் கொலையை தடுக்க அரசு அதற்கு தனி சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் - தமிழ் செல்வி தம்பதியரின் மகன் மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ்(26) ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரை பெண்ணின் சகோதரர் சுர்ஜித் (24) கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், அவர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதோடு இவர்கள் யார் என்ற முகம் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும்.

ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். அதற்கு தனி சட்டம் இயற்றி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.