ஓட்டப்பிடாரம் அருகே தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை!
நிருபர்
May 03, 2025
ஓட்டப்பிடாரம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஓட்டப்பிடாரம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ஒட்டநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சூரிய நாராயணன் (20). இவர் கடந்த சில தினங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டு திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர். இந்த நிலையில், நேற்று மாலை தனது தந்தையிடம் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

பின்னர், இரவு 11 மணியளவில் மணியாச்சி ரயில் நிலையம் அருகில் கல்லத்திக்கிணறு செல்லும் சாலை அருகில் உள்ள தண்டவாளப் பாதையில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலைய போலீசால் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும், சூரிய நாராயணனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட சூரிய நாராயணன் ஏற்கனவே கடந்த வருடம் விஷம் குடித்தும், கடந்த பிப்ரவரி மாதம் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடதக்கது.