மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் கிஷோர்குமார் தலைமையில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் ஷாம், பிரதீப், நந்தகுமார், அருண்பாண்டி, அருண்குமார், ஆதி, லோகேஷ், திலீபன், முத்துவேல், சுப்பிரமணி, சுபாஷ், குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.