தூத்துக்குடி அஞ்சலங்களில் இப்படியும் சேவைகள் இருப்பது தெரியுமா மக்களே!
நிருபர்
March 19, 2025
தூத்துக்குடி அஞ்சலங்களில் இப்படியும் சேவைகள் இருப்பது தெரியுமா மக்களே! Thoothukudi online news | Tuty News website | Today thoothukudi news | thoothukudi update | Thoothukudi | தூத்துக்குடி | தூத்துக்குடி செய்திகள் | இன்றைய தூத்துக்குடி செய்தி | தூத்து

தூத்துக்குடி அஞ்சலங்களில் செயல்படும் பொதுசேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்காக பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் "CSC பொது சேவை மையம்" தூத்துக்குடியிலுள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்கள் மற்றும் கிளை அஞ்சலகங்களிலும் செயல்படுகிறது. இதன் மூலம் கீழ்கண்ட சேவைகளைப் பொதுமக்கள் எளிதாகப் பெறலாம்.

மின் கட்டணம் செலுத்துதல், ஜீவன் பிரமான் -ஓய்வூதியர் சான்று, மொபைல் ரீசார்ஜ், லேண்ட்லைன் கட்டணம்/பிராட்பேண்ட் கட்டணம் / DTH ரீசார்ஜ், LIC பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ் பிரீமியம், விமான மற்றும் பேருந்து பயணசீட்டு முன்பதிவு, பான் கார்டு விண்ணப்பம், பாஸ்போர்ட் விண்ணப்பம், FASTAG பில் செலுத்துதல், தேசிய ஓய்வூதிய திட்டம்(NPS ), பயிர் காப்பீட்டு திட்டம் (PMFBY) மற்றும் பல சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சி.முருகன் தெரிவித்துள்ளார்.