தூத்துக்குடி அருகே உருட்டு கட்டையால் கணவரை தாக்கிய மனைவி கைது!
நிருபர்
March 17, 2025
தூத்துக்குடி அருகே கணவரை உருட்டுகட்டையால் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே கணவரை உருட்டுகட்டையால் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் அருகே சுந்தர் நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ரவீந்திரன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாலம்மாள் (53). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் கணவன் மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இதற்கிடையே ரவீந்திரன் குடித்துவிட்டு தனது மனைவி பாலம்மாளிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. .அப்போது ஆத்திரம் அடைந்த மனைவி பாலம்மாள் வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் அவரை சரமரியாக தாக்கினாராம்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த கணவர் ரவீந்திரன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.