தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாா்ச் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மார்ச் 14ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இம்முகாமில், வேலையளிக்கும் தனியாா் நிறுவன பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளா்களை தோ்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினி பயிற்சி உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம்.

தகுதியுள்ள, தனியாா்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.