தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய புது வழி!
நிருபர்
March 08, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியா் அலுவலகம் செல்லாமல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலங்களை அளவீடு செய்ய வட்டாட்சியா் அலுவலகம் செல்லாமல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமர்பித்து வந்த நிலையில், தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2023 ஆம் ஆண்டே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை இ-சேவை மையங்கள் மூலம் பெற முடியும். நில உரிமையாளர்கள் இ-சேவை மையங்களை அணுகி தேவையான கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும், அட்டவணைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பு தேதி விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.

கணக்கெடுப்பு முடிந்ததும், நில உரிமையாளர் மற்றும் சர்வேயரின் கையொப்பத்துடன் அளவிடப்பட்ட நிலத்தின் வரைபடம் போர்ட்டலில் பதிவேற்றப்படும், பின்னர் விண்ணப்பதாரர் https://eservices.tn.gov.in வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.