தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மாப்பிள்ளையூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு,

அமைச்சர் அனிதா R. ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் ஏற்பாட்டின் பெயரில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பால்துரை, ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் தங்க மோதிரம் பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளை  செயலாளர்கள் இராஜபாளையம் நெல்சன், அன்னை வேளாங்கண்ணி நகர் சரவனன், முத்துநகர் பிரபாகர், இளைஞரணியை சார்ந்த சிலுவைபட்டி பாரி, கிங்ஸ்டன், பாரதிநகர் அருண் கார்த்திக், சண்முகபுரம் ஜெயராமன், கணேஷ், தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.