தஞ்சாவூரில் பெரியார் உருவ சிலை அவமதிப்பு  ஜனநாயக மக்கள் எழுச்சி கழக மாநில தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர்  காயல் அப்பாஸ்  வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது .

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பாரதி தாசன் மகளிர் கல்லூரி ஏதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு காவித் துண்டு அணிவித்தும், அவர் தலையில் தொப்பி அணிவித்த சமூக விரோதிகளின் செயலை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது எனவும்,

தந்தை பெரியார் இந்த மண்ணை விட்டு மறைந்து ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் பெரியாரின் கொள்கை இன்றைக்கும் ஏற்று கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் . தமிழக மக்களால் போற்றப்படும் உன்னதமான தலைவர் பெரியாரின் உருவ சிலை அவமதிப்பை ஓரு போதும்  ஏற்று கொள்ள முடியாது.

மேலும் அறிஞர் அண்ணா, திருவள்ளுவர், அம்பேத்கர் , போன்ற  உருவ சிலைகளை தமிழகத்தில் தொடர்ந்து அவமதித்து வரும் சமூக விரோதிகளை காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

ஓரத்தநாட்டில் பெரியாரின் உருவ சிலைக்கு காவி மூலம் அசிங்க படுத்திய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான சட்டத்தின் கீழ்  கைது செய்ய வேண்டும் என தமிழக அரசையும் , காவல் துறையும் , ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.