தூத்துக்குடி : ரேசன் கார்டுகளில் மாற்றம் செய்யனுமா? ஒரே நாளில் வேலை முடிஞ்சிரும்!
நிருபர்
February 07, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 8ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. Thoothukudi news Today news Thoothukudi today news Vilasal news Vilasal news today Today t

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் வருகிற 8ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத்திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 2025 மாதத்திற்கான சிறப்பு முகாம் 08.02.2025 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது.

மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத் தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.