தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்யா, தேசிய அளவில் நடந்த நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தன்யா. தடகள வீராங்கனையான இவர், கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டியில் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்று சாதனை படைத்தார். இதன் மூலம் தேசிய தடகளப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்ட மாணவி தான்யா, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசை பெற்று சுப்பையா வித்யாலயம் பள்ளிக்கும், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தார்.

தொடர்ந்து, சாதனை படைத்த மாணவிக்கு சுப்பையா வித்யாலயம் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேச மூர்த்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், பள்ளி செயலாளர் முரளி கணேசன், பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தினி கௌசல் ஆகியோர் பரிசு, பதக்கங்கள் வழங்கி பாட்டினார்கள்.