தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியிருந்தாலும்,  அவர் மக்கள் மனதிலும், சக காவல்துறையினர் மனதிலும் நிறைந்து கானப்படும் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மீண்டும் எங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கே காவல் கண்காணிப்பாளராக வர வேண்டும் எனவும், அவரது பணியிடமாற்றத்தை பரீசிலித்து, ரத்து செய்ய வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பிரச்சினைகளோடு வந்து  பனியில் அமர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டாத நல் உள்ளங்கள் இருக்க முடியாது. அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை மாவட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார் என்பதே உண்மை.

தூத்துக்குடியை சுற்றி நடந்த கஞ்சா வியாபாரம் கட்டுக்குள் கொண்டு வந்தார்கள் ரவுடிகளின் அட்டகாசம் குறைக்கப்பட்டது அதிகமாக குண்டாஸ் போடப்பட்டது.

குறிப்பாக, இந்த லாக் டவுன் நேரங்களில் அவர் செய்த காரியங்கள் ஏராளம் ஏராளம். திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ஏழை எளியவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் அனைத்தும் வழங்கினார். எங்கு எவர் அழைத்தாலும் கருணை உள்ளத்தோடு அங்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி ஏழை எளியோரிடமும். தூத்துக்குடி மக்களிடமும் ஒரு மிகப்பெரிய அன்பை சம்பாதித்தார் என்பது மறுக்கவே  முடியாது.

ஒரு விபத்து நடந்த இடத்தில் கூட    முதல் நபராக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார். எந்த அரசியல் நபருக்கும் குடை பிடிக்க  விரும்பாத ஒரு கொடை வள்ளல் என்றே அவரை சொல்லலாம்.

பள்ளி மாணவர்களிடையே மாணவிகளிடையே நல்ல கருத்துக்களை பரிமாறி அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கலந்துரையாடல் நடத்தி மாணவ மாணவர்களிடையே நன்மதிப்பை பெற்றார். அதுமட்டுமல்ல காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் மற்ற காவலர்களுக்கு இவர் வெகுமதியும் சான்றிதழும் வழங்கி பாராட்டுக்களை கோபுரமாக குவித்துக் கொண்டே இருந்தார்.

இவர் வழங்கும் வெகுமதி பாராட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவே ஒரு காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளராக இருந்தாலும் சரி உதவி ஆய்வாளராக இருந்தாலும் சரி மற்ற காவல் துறை நண்பர்கள் எவராக இருந்தாலும் சரி நாமும் பணியில் எஸ்பி போல் பணி செய்ய வேண்டும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு மோட்டிவேஷன் ஏற்படுத்திக் கொடுக்க இவரால் மட்டுமே முடிந்தது.

காவல்துறையில் பணியாற்றும் அனைவருமே இவரைப் போல் செயல்பட இவரைப் பாராட்டி இவர் பின்தொடர்ந்து மக்களுக்காக பணி செய்தனர் .

மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு என்ற ஒரு கலந்துரையாடலை தூத்துக்குடி மக்களிடையே ஏற்படுத்திக் கொடுத்தனர்  .

தூத்துக்குடி மக்களின் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட பெடிசன்ஸ் அனைத்தையும் ஒரு முகாம்  நடத்தி விசாரணையை உடனடியாக முடித்து வைக்க ஏற்பாடு செய்து திறம்பட செயல்பட்டார்.

திருட்டுப்போன நகை பொருட்கள் அனைத்தையும் உடனடியாக கிடைக்க தனிப்படை அமைத்து திறம்பட செயல்பட்டார். அப்படி மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைத்து மக்களிடையே மிகுந்த மரியாதையையும் அன்பையும் சம்பாதித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 250 300 கிலோ மீட்டர் வரை மக்கள் பணிக்காக சுற்றி பம்பரமாக வந்தார் என்பது உண்மை உண்மை உண்மை .

சாத்தான்குளம் சம்பவத்திற்கு அப்புறம் போலீஸ் மத்தியில் இருந்த நல் உறவு இல்லாமல் போனது அந்த சமயத்தில் வந்து மாவட்டத்தில் பணி  பணியமர்த்த மாவட்ட மக்களின் நண்பன் என்றே சொல்லலாம் ஜெயக்குமாரை மீண்டும் போலீஸுடன் நல் உறவை ஏற்படுத்த ஏதுவாக பாடுபட்ட மக்கள் நண்பன் எங்கள் ஜெயக்குமார்

இப்பொழுது அவர்கள் தேர்தலை காரணம் காட்டி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அது தூத்துக்குடி மக்களுக்கு துளி அளவும் விருப்பம் இல்லை என்பதே உண்மை.

எந்த ஒரு அரசியல் அமைப்புக்கும் துணை போகாமல் சட்டம் ஒழுங்கு மக்கள் பாதுகாப்பு என்று இருந்த  கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரராக தூத்துக்குடி மக்களிடையே வலம் வந்தவர். மக்களின் நண்பர். காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார். இவர் தூத்துக்குடி  மாவட்டத்தை விட்டு செல்வது மக்களுக்கு மிகுந்த வருத்தம் .

மக்கள் மனதிலும், சக காவல்துறையினர் மனதிலும் நிறைந்து கானப்படும் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மீண்டும் எங்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கே காவல் கண்காணிப்பாளராக வர வேண்டும் எனவும், அவரது பணியிடமாற்றத்தை பரீசிலித்து, ரத்து செய்ய வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.