புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஸ் சர்மா காலமானார்
நிருபர்
February 18, 2021
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஸ் சர்மா காலமானார்

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஸ் சர்மா (73) கோவாவில் காலமானார்.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பிறந்த அவர் விமானியாக இருந்தவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உதவியாளராகவும், நரசிம்மராவ் அமைச்சரவையில் பெட்ரோலிய துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் உறுப்பினரான அவர், ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு 1991 ல் அமேதி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 2004 முதல் 2016 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தார். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.