6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... 6 வருடம் சிறை தண்டனை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
நிருபர்
December 31, 2024
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... 6 வருடம் சிறை தண்டனை வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 6 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாழவள்ளான் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் சக்திவேல் (34) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (30.12.2024) குற்றவாளியான சக்திவேல் என்பவருக்கு 6 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானப்பிரகாசி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் முருகலெட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.